ஆவணி மாதத்தின் நான்காம் நாள் விநாயகர் சதுர்த்தி துவங்குகிறது. பத்து நாள் விழாவாக கொண்டாடப்படும் இந்த விழா க்ரீகோரியன் காலண்டரின் படி ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் வரும். இந்தியர்கள் தங்கள் வீடுகளில் கௌரி மற்றும் விநாயகர் சிலைகளை வணங்குவார்கள். இதனை பெரிய விழாவாக அனைவரும் கொண்டாடுவார்கள்.
விழாவின் போது பெண்கள் சிறப்பு உணவுகளை தயாரிப்பார்கள். விநாயகருக்கு நைவேத்யமாக படைத்துவிட்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் பகிர்ந்து கொள்வார்கள்.
விநாயகர் சதுர்த்தி அன்று சிறப்பு உணவாக மோதகம் தயாரிக்கப்படும். அது விநாயகரின் ப்ரியமான உணவாக கருதப்படுவதால் பெரும்பாலானோர் அதனை விரும்பி செய்வார்கள். அதைத்தவிர போளி,பஜ்ஜி,ஸ்வீட்ஸ் என ஏராளமானவற்றை செய்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அந்த நாளை கொண்டாடுவார்கள்.
No comments:
Post a Comment