adsterra

Friday, 25 August 2017

சுப விநாயகர் சதுர்த்தி!

ஆவணி மாதத்தின் நான்காம் நாள் விநாயகர் சதுர்த்தி துவங்குகிறது. பத்து நாள் விழாவாக கொண்டாடப்படும் இந்த விழா க்ரீகோரியன் காலண்டரின் படி ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் வரும். இந்தியர்கள் தங்கள் வீடுகளில் கௌரி மற்றும் விநாயகர் சிலைகளை வணங்குவார்கள். இதனை பெரிய விழாவாக அனைவரும் கொண்டாடுவார்கள்.
விழாவின் போது பெண்கள் சிறப்பு உணவுகளை தயாரிப்பார்கள். விநாயகருக்கு நைவேத்யமாக படைத்துவிட்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் பகிர்ந்து கொள்வார்கள்.
விநாயகர் சதுர்த்தி அன்று சிறப்பு உணவாக மோதகம் தயாரிக்கப்படும். அது விநாயகரின் ப்ரியமான உணவாக கருதப்படுவதால் பெரும்பாலானோர் அதனை விரும்பி செய்வார்கள். அதைத்தவிர போளி,பஜ்ஜி,ஸ்வீட்ஸ் என ஏராளமானவற்றை செய்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அந்த நாளை கொண்டாடுவார்கள்.

சுப விநாயகர் சதுர்த்தி!

ஆவணி மாதத்தின் நான்காம் நாள் விநாயகர் சதுர்த்தி துவங்குகிறது. பத்து நாள் விழாவாக கொண்டாடப்படும் இந்த விழா க்ரீகோரியன் காலண்டரின் படி ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் வரும். இந்தியர்கள் தங்கள் வீடுகளில் கௌரி மற்றும் விநாயகர் சிலைகளை வணங்குவார்கள். இதனை பெரிய விழாவாக அனைவரும் கொண்டாடுவார்கள்.
விழாவின் போது பெண்கள் சிறப்பு உணவுகளை தயாரிப்பார்கள். விநாயகருக்கு நைவேத்யமாக படைத்துவிட்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் பகிர்ந்து கொள்வார்கள்.
விநாயகர் சதுர்த்தி அன்று சிறப்பு உணவாக மோதகம் தயாரிக்கப்படும். அது விநாயகரின் ப்ரியமான உணவாக கருதப்படுவதால் பெரும்பாலானோர் அதனை விரும்பி செய்வார்கள். அதைத்தவிர போளி,பஜ்ஜி,ஸ்வீட்ஸ் என ஏராளமானவற்றை செய்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அந்த நாளை கொண்டாடுவார்கள்.

விநாயகரின் அருளை முழுமையாக பெற இந்த மந்திரங்களை சொல்லுங்கள்!

விநாயக சதூர்த்தி நாளை (அக்.8) இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. முழு முதல் கடவுளான விநாயகரின் அருளை நாம் அனைவரும் பெற்று வளமுடன் வாழ வேண்டியது அவசியம். எனவே இந்த பகுதியில் விநாயகரின் ஸ்லோகங்களை காணலாம். இந்த ஸ்லோகங்களை விநாயகர் சதூர்த்தி அன்று மட்டும் இல்லாமல், தினமும் சொல்லி, விநாயகருக்கு அருகம்புல் மாலையிட்டு வணங்கினால், விநாயகரின் அருளை முழுமையாக பெறலாம்.

1. விநாயகர் சகஸ்ரநாமம்:

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

2. விநாயகர் ஸ்லோகம் 1:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

3. விநாயகர் ஸ்லோகம் 2:

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

4. விநாயகர் ஸ்லோகம் 3:

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

5. விநாயகர் ஸ்லோகம் 4:

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

6. விநாயகர் காயத்ரி மந்திரம்:

வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

7. விநாயகர் ஸ்லோகம் 5:

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

விநாயகரை இப்படி வழிபட்டால் அறிவு மேம்படும்! குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்!!

விநாயகரை நாம் வணங்கும் போது நமது இரு கைகளாலும் நமது தலையை கொட்டிக்கொண்டு வணங்குகிறோம். இது எதனால் என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா? இதற்கு ஒரு புராணக் காரணம் உள்ளது. அதை பற்றி இந்த பகுதியில் காணலாம். சிவனிடம் இருந்த காவிரி நதியைக் கமண்டலத்தில் அடக்கிய அகத்திய முனிவர் தென்திசை நோக்கி வந்தபோது குடகுமலையில் சிவபூஜை செய்து கொண்டு இருந்தார். அப்போது இந்திரன் சீர்காழியில் பூஜை செய்து கொண்டிருந்தார்.

மழையின்றி நந்தவனம் வாடியது. நாரத முனிவர் இந்திரனை பார்த்து, அகத்தியருடைய கமண்டலத்தில் உள்ள காவிரி பெருகுமானால் உன் பூங்கா பொலிவு பெறும் என்று கூறினார். இந்திரன் விநாயகரை வழிப்பட்டு வேண்டிக் கொண்டான். விநாயகர் காக்கை வடிவம் எடுத்து சென்று காவிரி அடங்கிய காமண்டலத்தின் மீது அமர்ந்தார். அகத்தியர் காகத்தைக் கரத்தால் ஓட்டினார். காகம் காலால் உந்திப் பறந்தது.
  1. கமண்டலம் கவிழ்ந்து காவிரி பெருக்கெடுத்து ஓடியது. அகத்தியர் காகத்தின் மீது சீறிப்பாய்ந்தார். அது சிறுவனாகி நின்றது. அச்சிறுவனை இரு கரங்களாலும் கொட்டும் பொருட்டுக் குறுமுனி ஓடினார். பிள்ளையார் அவருக்கு அகப்படாமல், அங்கும் இங்குமாக ஓடினார். அகத்தியர் அச்சிறுவனை அணுகிக் குட்டுவதற்கு இரு கரங்களையும் ஓங்கினார். ஐங்கரங்களுடன் விநாயகர் காட்சி தந்தருளினார். அகத்தியர் திகைத்து போனார். விநாயகப் பெருமானே உம்மைக் குட்டுவதற்காக கையை ஓங்கினேனே? என்று தன் தலையிலேயே கொட்டிக் கொண்டார். விநாயகர் அவருடைய கரங்களைப் பற்றி இன்று முதல் என் முன் பயபக்தியுடன் தலையில் குட்டிக் கொண்டோர் கூரிய மதியும், சீரிய நிதியும் பெறுவார்கள் என்று அருளினார். இதனால் விநாயகர் முன் பக்தர்கள் தலையில் கொட்டிக் கொள்ளும் மரபு உண்டாயிற்று.


Thursday, 24 August 2017

அதிக உணவை மதிய நேரம்தான் சாப்பிட வேண்டுமாம்! ஏன் தெரியுமா?

ஒரு ராஜாவைப் போன்ற காலை உணவை சாப்பிட வேண்டும் என்று எல்லாரும் கேள்விப்பட்டிருக்கிறோம் . காலை உணவு குளுக்கோஸ் அளவை மீட்டமைக்க உதவுகிறது, இது நமது மூளை செயல்பாட்டிற்கு தேவையான அத்தியாவசிய கார்போஹைட்ரேட் ஆகும். அலுவலகம் மற்றும் பள்ளிகளுக்கு விரைந்திடவும் மற்ற வேலைகளுக்கு பறந்திடவும் நினைத்து காலை உணவை உட்கொள்வதன் முக்கியத்துவத்தை மறந்து விடுகிறோம். காலை உண்ணும் உணவுதான் ஒரு நாளின் மொத்த ஆற்றல் உருவாவதற்கு முக்கியமான திறவுகோல் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
காலை உணவு வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. இதன் தொடர்ச்சியாக உணவு செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து சேமிப்பு தொடர்பான உயிரியல் செயல்பாடுகள் உடலில் ஏற்படும். சிலருக்கு காலையில் அதிகமான உணவை எடுத்துக் கொள்வதில் சிரமங்கள் இருக்கலாம். சிலருக்கு அதிகமான காலை உணவு எடுத்து கொள்ளும்போது வாய்வு தொந்தரவுகள் ஏற்படலாம். நாம் எந்த நேரத்தில் அதிகமான அளவு உணவை எடுத்து கொள்ளலாம் எனபது ஒரு பெரிய கேள்வி.அதற்கு விடையை இப்போது பார்ப்போம்.
செரிமான சக்தி : நமது செரிமான சக்தி ஆயுர்வேதத்தில் அக்னி என்று அழைக்கப்படுகிறது. இந்த அக்னி ,ஒருவர் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ முக்கியமானது. அக்னி என்பது நெருப்பை குறிக்கும். அக்னி (தீ) உடலில் உள்ள அனைத்து செரிமான மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை மையமாகக் கொண்ட ஆற்றல் வெப்பத்தை குறிக்கிறது, மேலும் உடலின் மென்மையான வேலைக்கு பொறுப்பாகவும் உள்ளது. ஒருமுறை அது அணைக்கப்படுவதால் மரணம் விரைவில் தொடரும் என நம்பப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் வெல்வேறு இயல்பு இருப்பதை போல ஒவ்வொரு உடலும் வெல்வேறு தன்மையில் இயங்கும். ஆனால் நீங்கள் கூர்மையாக கவனித்தால் ஒன்று தெளிவாக தெரியும். அது என்னவென்றால் உடல் அதன் தேவைகளுக்கு ஏற்றது போல் சில சிக்னல்களை கொடுக்கிறது. பசி, தாகம் முதலியன அவை கொடுக்கும் சிக்னல்கள் தான். பசிக்கும்போது ஒரு மாதிரியும் பசி அடங்கியபின் வேறு மாதிரியும் அதன் சிக்னல்கள் இருக்கும். இந்த நெருப்பை சரியான விகிதத்தில் சமன் செய்வது, தகுந்த அளவு உண்பதால் மட்டுமே சாத்தியம். நாம் உண்ணும் உணவு செரிமானத்திற்கும் வளர்சிதை மாற்றத்திற்கும் ஏற்ற அளவினதாய் இருக்க வேண்டும்.

காலை : காலை நேரம் உடல் புத்துயிர்ப்பு அடைவதற்கான நேரம். கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றி புதிய ஆற்றலை உருவாக்க உடலை தயார் செய்யும் நேரம் என்றும் கூறலாம். தியானம் மற்றும் உடற்பயிற்சிக்கான சிறந்த நேரமும் இது தான். ஆகவே இந்த காலை நேரத்தில் எளிய உணவுகளை எடுத்து கொள்வதின் மூலம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை நீங்கள் தூண்டுகிறீர்கள். காலை வேளையில் அதிக உணவு உட்கொள்ளும் போது அக்னி ஏற்றத்தாழ்வான ஒரு நிலையில் மாறிவிடுகிறது.

விளைவு : இதன்மூலம் அசிடிட்டி , சோம்பல் தன்மை போன்ற இடையூறுகள் ஏற்படலாம். மதிய உணவின் போது நீங்கள் மன நிறைவோடு எந்த தொந்தரவுமில்லாமல் அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். சாப்பிடும் போது உங்கள் கவனம் உணவில் மட்டுமே இருப்பது கூடுதல் நன்மைகளை கொடுக்கும். வேகவேகமாக உண்ணுதல் தவிர்க்கப்படலாம்.

மதியம் : சூரியன் உச்சிக்கு வரும் வேளையில் தான் அக்னியும் உச்சத்தில் இருக்கும். ஆம்! நமது செரிமான சக்திக்கும் சூரியனுக்கும் ஒரு நெருங்கிய சம்மந்தம் உண்டு. அதனால் தான் மழைக்காலங்களில் நமக்கு பசி எடுக்காத உணர்வு மேலோங்கி இருக்கும். நம் வயிறுக்கென்று ஒரு கடிகாரம் உண்டு. அந்த நேரத்தின் அட்டவணையை நாம் பின் தொடர்ந்தால் அது திறமையாக வேலை செய்யும். அதன் சுழற்சி தடைபடும் தான் தீய விளைவுகள் ஆரம்பமாகின்றன.

நல்ல நேரம் : மதிய வேளையில் செரிமான சக்தி அதிகமாக இருக்கும்.அதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். பல ஆய்வுகள், மதிய வேளையில் தான் செரிமான மண்டலம் அதிக அளவிலான செரிமான சாறுகளையும் என்ஸைம்களையும் சுரப்பதாக கூறுகின்றன,ஆகையால் இதுவே நாம் அதிகமான உணவை அருந்த கூடிய நல்ல நேரம். ஆகவே அடுத்த முறை விருந்துகளுக்கு பயண படும் போது அது மதிய உணவாக இருக்கட்டும். காலை வேளை உணவுகள் சிறிது பழங்கள், பால், ஓட்ஸ் போன்ற எளிய உணவாக இருப்பது உடலுக்கு நலன் விளைவிக்கும்.



சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்!

சைக்கிள் ஓட்டுதல் என்பது ஒரு எளிய வகை உடற்பயிற்சி . வீட்டில் உள்ள அனைவராலும் செய்ய கூடிய ஒரு உடற்பயிற்சி. சைக்கிள் போக்குவரத்து வாகனமாகவும் இருப்பதால் பலவித நன்மைகளும் இதில் உண்டு. குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போதும் பெரியவர்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போதும் இதனை பயன்படுத்தி நன்மை அடையலாம். சைக்கிள் ஓட்டுவதால் உங்கள் பணம் மிச்சமாகிறது, உங்கள் உடல் ஃபிட்டாகிறது, உங்கள் சுற்று சூழல் பாதுகாக்கப்படுகிறது.


சைக்கிள் ஓட்டுவது என்பது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தாத ஒரு உடற்பயிற்சியாகும். ஓட்ட பயிற்சியை காட்டிலும் உங்கள் மூட்டுகளுக்கு இவை நல்ல பலனை கொடுக்கும். உங்கள் இதய நலனை மேம்படுத்த வாரத்திற்கு 150 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது நல்லது.தொடர்ந்து இந்த பயிற்சியை முயற்சிக்கும்போது விரைவில் நல்ல பலனை காணலாம். சைக்கிள் ஓட்டுவதால் உங்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தை காணலாம் மற்றும் உங்கள் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

ஸ்மார்ட் ஆகலாம்: சைக்கிள் ஓட்டுவதால் உங்கள் மூளையின் சக்தி அதிகரிக்கிறது மற்றும் பெரியவர்கள் அல்சைமர் போன்ற வியாதிகளில் இருந்து பாதுகாக்கப்படுகின்றனர் என்று 2007ம் ஆண்டு சார்லஸ் ஹில்மன் நடத்திய ஆய்வு குறிப்பிடுகிறது. அதே ஆண்டு Dr .பில் டோம்ப்ரோவ்ஸ்கி நடத்திய ஆய்வில் குழந்தைகளின் மன வளர்ச்சியும் அதிகரிக்கிறது என்று குறிப்பிடப்படுகிறது.


நோய்களை குணமாக்குகிறது: சமீபத்திய ஆய்வு ,வயது முதிர்ந்தவர்களின் மூட்டு வலி மற்றும் கீல்வாதம் போன்ற நோய்கள்,தொடர்ச்சியான சைக்கிள் பயிற்சி மூலம் குறைந்திருக்கிறது என்றும் அவர்கள் உடலில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என்று கூறுகிறது. இந்த பயிற்சி நேரம் ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆனால் இதன் பலனோ மிகவும் அதிகம்.


இதயத்தை வலுப்படுத்துகிறது: சைக்கிள் ஓட்டுவது இதயத்திற்கு நன்மை பயக்கிறது. ஆய்வு பூர்வமாகவும் இது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் மருத்துவம் மற்றும் அறிவியல் துறை நடத்திய 5 வருட ஆய்வில்,1500 பேரை சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களுள் 31% பேருக்கு உயர் இரத்த அழுத்தம் வரும் வாய்ப்பு இதன் மூலம் குறைந்ததாக கூறப்படுகிறது.


கவர்ச்சியான தோற்றம்: தி பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் நடத்திய ஆய்வில் 600 ஆண்கள் மற்றும் பெண்களை நியமித்தது. அவர்களில் 13% பேர் சைக்கிள் ஓட்டுபவர்களை புத்திசாலிகள் என்றும் சாந்தமானவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.23% பேர் சைக்கிள் ஓட்டுபவர்கள் தான் அவர்கள் விரும்பும் தடகள வீரர்கள் என்றும் பதில் அளித்துள்ளனர்.

கவர்ச்சியான தோற்றம்: தி பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் நடத்திய ஆய்வில் 600 ஆண்கள் மற்றும் பெண்களை நியமித்தது. அவர்களில் 13% பேர் சைக்கிள் ஓட்டுபவர்களை புத்திசாலிகள் என்றும் சாந்தமானவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.23% பேர் சைக்கிள் ஓட்டுபவர்கள் தான் அவர்கள் விரும்பும் தடகள வீரர்கள் என்றும் பதில் அளித்துள்ளனர்.

புற்று நோயை தடுக்கிறது: சரியான உடல் எடையை பராமரிப்பதும், சீரான உடற்பயிற்சியும், அளவான உணவும் நம் உடலை புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. அமெரிக்கன் மெடிக்கல் அஸோஸியேஷன் 14,000 ஆண்களை பரிசோதித்தபிறகு வெளியிட்ட கருத்து என்னவென்றால், உடற்பயிற்சியின் மூலம் உடலை சீராக வைத்திருப்பவர்கள் நடுத்தர வயதை எட்டும் போது அவர்களுக்கு குடல் மற்றும் பெருங்குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தன்னை பற்றி உயர்வாக எண்ணுதல்: பொதுவாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு குறிப்பாக சைக்கிள் ஓடுகிறவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும். மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவர். ஒரு சிறந்த உடற் பயிற்சிக்கு பின்னர் அவர்கள் உடலில் புத்துணர்ச்சி அடைய செய்யும் ஹார்மோன்கள் சுரக்கும். இதன் மூலம் அவர்கள் உலகத்தையே தமதாக்குவர் . சைக்கிள் ஓட்டுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

நீண்ட ஆயுள்: டூர் டி பிரான்ஸ் என்ற ஆய்வில், முற்காலத்தில் சைக்கிள் ஒட்டியவர்களின் ஆயுள் நீடித்ததை பார்க்க முடிந்தது . சராசரியாக 81.5 ஆண்டுகள் அவர்களின் ஆயுள் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது சராசரியாக 70 ஆண்டுகள் தான் ஆயுள் நீடிக்கிறது. இதற்கு காரணம் நாம் கார், பஸ் என்று நமது போக்குவரத்து பயன்பாட்டை மாற்றியதுதான். இப்போது கூட தொடர்ந்து சைக்கிளை ஓட்டும்போது 3 மாதங்கள் முதல் 14 மாதங்கள் நம் வாழ்நாளில் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. நோய்களை அண்ட விடாமல் செய்கிறது